#INDvsENG 2வது டெஸ்ட் – எழுச்சி பெறுமா இங்கிலாந்து அணி??

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் படுமோசமாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை தற்போது விளையாடி வருகிறன்றனர். முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா அணி 329 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் 161 ரன்களை குவித்தார். அதன்பின்பு தனது முதல் இன்னிங்ஸை துவக்கி இங்கிலாந்து அணி அஸ்வினிடம் சரணடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அஸ்வின் சுழலை சந்திக்க முடியாமல் இங்கிலாந்து அணி 134 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அருமையாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இதில் கேப்டன் விராட் கோஹ்லி அரைசதம் அடித்து அசத்தினார். பௌலிங்கில் அசத்திய அஸ்வின் பேட்டிங்கில் சதம் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். இவரது சதத்தால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 286 ரன்களை குவித்தது. முடிவில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை இலக்காக வைத்தது.

2009 மக்களவை தேர்தல் – பா.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்!!

பெரிய இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமையவில்லை. களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்புகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்து வருகிறது. தற்போது இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் அக்சர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தற்போது உணவு இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் போட்டி துவங்கவுள்ளது.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து – 116/7

ரூட் – 33*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here