கோவில்கள், மால்கள் திறக்கப்படாது – லாக் டவுன் தொடரும் மாநிலம்..!

0
lockdown in odisha
lockdown in odisha

நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு

கொரோனாவால் மார்ச் 24 இல் தொடங்கிய ஊரடங்கு ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்று (ஜூன் 8) வழிபாட்டு தலங்கள், மால், தியேட்டர்,ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவை திறக்கப்பட்டன. மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அன்லாக் நடைமுறைகள் அமல்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

lockdown
lockdown

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் மட்டும் எந்தவொரு பொது இடங்களும் இன்று திறக்கப்படவில்லை. வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், மால்கள், விடுதிகள் உள்ளிட்டவை வரும் 30ஆம் தேதி தொடர்ந்து மூடியே இருக்கும். ஊரடங்கின் அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் – 2.1 ரிக்டர் அளவாக பதிவு..!

lockdown
lockdown

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது, “மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வைரஸ் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம் ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வீட்டிற்கு வந்து உணவு டெலிவரி செய்யும் நடைமுறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என்றார்.

வழிபாட்டு தலங்கள்

முன்னதாக ஒடிசாவில் உள்ள 46 வழிபாட்டுத் தலங்கள் உட்பட நாடு முழுவதும் 820 தலங்களை இன்று முதல் திறக்க இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அளித்திருந்தது. முன்னதாக ஒடிசாவில் உள்ள 46 வழிபாட்டுத் தலங்கள் உட்பட நாடு முழுவதும் 820 தலங்களை இன்று முதல் திறக்க இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அளித்திருந்தது.

corona virus test
corona virus test

ஆனால் ஒடிசா மாநில அரசு வேறு முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக பூரி ஜெகன்னாதர் ஆலயம் வரும் ஜூலை 5ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகி கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மோசமான பாதிப்பைக் கொண்டுள்ள 11 மாவட்டங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன.

temples opening today
temples opening today

இம்மாத இறுதி வரை இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் இன்று காலை நிலவரப்படி 2,994 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here