ஆசிரியர்கள் தகுதி சான்று ஆயுளுக்கும் செல்லும் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

0

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு, கற்பித்தல் துறையில் பணியாற்ற விருப்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆசிரியர்கள் தகுதி சான்று ஆயுளுக்கும் செல்லும்:

பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்களுக்கு முன்தகுதி எனக்கூறப்படும் தேர்வாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் வழங்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த மாற்றம் 2011 முதல் ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, மேலும் காலாவதியான சான்றிதழ்களை புதுப்பிக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here