டேஸ்டியான ‘தாவா பன்னீர்’ ரெசிபி – வீட்டில செஞ்சு அசத்துங்க!!

0

சிக்கன் அல்லது மட்டனை விரும்பாதவர்கள் கண்டிப்பாக பன்னீரை விரும்பி உண்பர். அந்த வகையில் பன்னீர் செய்வது கடினம் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், அது தான் கிடையாது. பன்னீரை ஈஸியாக ஒரு சில பொருட்களை வைத்து செய்து விடலாம். யம்மியான ‘தாவா பன்னீர்’ எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

பன்னீரை ஊற வைக்க 
  • பன்னீர் – 400 கிராம்
  • தயிர் – 3 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
மசாலா செய்ய
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • பெரிய கேப்சிகம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • காஷ்மீரி ரெட் சில் பவுடர் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகம் / ஜீரா தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த பன்னீரை போட்டு அதில் தயிர், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின், இந்த கலவையினை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு, ஒரு தவாவை காய வைக்க வேண்டும். தாவா காய்ந்ததும் அதில் எண்ணெய், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதக்கவும்.

கொரோனா பரவல் எதிரொலி – மநீம கட்சி வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!!

பின்பு, வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும் அதில் கேப்சிகம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகம் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு, இந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் அதில் ஊற வைத்து தனியாக வைக்கப்பட்டிருந்த பன்னீரை இத்துடன் கலக்கவும். ஒரு 5 நிமிடங்கள் கொதித்ததும், இந்த கலவையினை இறக்கி வைத்து விடவும். பன்னீரை ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் வைத்து சூடாக பரிமாறவும். அவ்ளோ தான்!!

சூடான மற்றும் யம்மியான “தாவா பன்னீர் தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here