ஓய்வுபெற்ற TANTEA தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு.,, முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

0
ஓய்வுபெற்ற TANTEA தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு.,, முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!
ஓய்வுபெற்ற TANTEA தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு.,, முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

தமிழ்நாடு TANTEA நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தரவு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) நிறுவனத்தை நம்பி ஏரளாமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த TANTEA நிறுவனத்தில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடிகாரணமாக, அந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க நில பகுதியை வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து அந்த பகுதியில் தங்கியிருக்கும் டேன் டீ பணியாளர்கள் அந்த இடத்தை விட்டு காலி செய்யும் நிர்பந்ததிற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் கலப்பு பிரிவிலும் தங்கம் வென்ற இந்திய ஜோடி…, குறிவைத்து முதலிடம் பிடித்து அசத்தல்!!

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பின. அதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , “திமுக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடத்தப்படும்” என்று அறிவித்தார். இந்த சமயத்தில் TANTEA நிறுவனத்தில் ஓய்வுபெற்ற 677 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பயனாளர் பங்களிப்புத் தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயையும் தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்த அதிகாரபூர்வ செய்தி குறிப்பையும முதல்வர் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here