அதிரடி முடிவை கையில் எடுத்த ட்விட்டர் ஊழியர்கள்.,, நவம்பர் 21 வரை அலுவலகங்கள் மூடல்!!

0
அதிரடி முடிவை கையில் எடுத்த ட்விட்டர் ஊழியர்கள்.,, நவம்பர் 21 வரை அலுவலகங்கள் மூடல்!!
அதிரடி முடிவை கையில் எடுத்த ட்விட்டர் ஊழியர்கள்.,, நவம்பர் 21 வரை அலுவலகங்கள் மூடல்!!

ட்விட்டர் ஊழியர்கள் தொடர்ந்து தங்கள் வேலையை ராஜினாமா செய்து வரும் இந்த நிலையில், அலுவலகங்கள் நவம்பர் 21 வரை மூடப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அலுவலகங்கள் மூடல்:

உலகின் no.1 பணக்காரர் எலான் மஸ்க் கடந்த மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். மேலும் அந்த காலகட்டத்தில், ட்விட்டர் ஊழியர்களில் 75% பேரை நிறுவனம் வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும் அது ஒரு பொய்யான தகவல் என்றும் மீண்டும் செய்திகள் வைரலானது. இதையடுத்து ட்விட்டர் ஊழியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது ட்விட்டர் அலுவலகங்கள் வரும் நவம்பர் 21 வரை மூடப்படும் என்று ஊழியர்களுக்கு நிறுவனம் மெயில் அனுப்பி உள்ளதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க், அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக பணியாற்ற வேண்டும். இந்த விதிக்கு உட்பட்டவர்கள் மட்டும் தங்களுடைய பணியை தொடரலாம், மற்றவர்கள் வேலையை ராஜினாமா செய்து கொள்ளலாம் என்று கடுமையான மெயில் ஒன்றை ஊழியர்களுக்கு அனுப்பி உள்ளார். இவை ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து எலான் மஸ்க், போட்ட, இந்த உத்தரவை நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஏற்க மறுத்து, தங்களுடைய வேலையை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தனர்.

ஓய்வுபெற்ற TANTEA தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு.,, முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

மேலும் ஒரு குறிப்பிட்ட ஊழியர்கள் மட்டும் இந்த நீண்ட நேர வேலை பார்க்கும் விதிக்கு உட்பட்டு அலுவலகத்தில் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. எனவே அதிகமாக ட்விட்டர் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்து வருவதால், அதை தடுக்கும் விதமாக நவம்பர் 21 வரை ட்விட்டர் அலுவலகம் மூடப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இதனால் இணையத்தில் #RIPTwitter என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here