ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் கலப்பு பிரிவிலும் தங்கம் வென்ற இந்திய ஜோடி…, குறிவைத்து முதலிடம் பிடித்து அசத்தல்!!

0
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் கலப்பு பிரிவிலும் தங்கம் வென்ற இந்திய ஜோடி..., குறிவைத்து முதலிடம் பிடித்து அசத்தல்!!
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் கலப்பு பிரிவிலும் தங்கம் வென்ற இந்திய ஜோடி..., குறிவைத்து முதலிடம் பிடித்து அசத்தல்!!

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி நாளான இன்று இந்திய ஜோடி ஏர் பிஸ்டல் பிரிவின் ஜூனியர் சீனியர் இரண்டிலும் தங்கப் பதக்கதங்களை வென்று அசதியுள்ளனர்.

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்:

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரின் 15 வது சீசன் கடந்த 9ம் தேதி முதல் தென் கொரியாவில் உள்ள டேகுவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், சீனியருக்கான கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர், கஜகஸ்தான் வீரர்களை எதிர்த்து போட்டியிட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், இந்திய ஜோடி, ஆரம்ப முதல் அற்புதமாக குறிவைத்து, 17 புள்ளிகளை எடுத்திருந்தனர். ஆனால், கஜகஸ்தான் ஜோடி 3 புள்ளிகளை மட்டுமே எடுத்து பின்தங்கினர். இதனால், இந்திய ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றனர். இவர்களை போல, ஜூனியருக்கான கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா ஜோடி உஸ்பெகிஸ்தான் ஜோடியை 17-3 புள்ளிகணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் இவர் தான்.., இதை யாருமே எதிர்பார்கலையே!!

இந்த தொடரின், ஏர் பிஸ்டல், ஏர் ரைபிள் என இரண்டு பிரிவிலும் பங்குபெற்று இந்திய வீரர்கள், தனிநபராகவும், ஒரு அணியாகவும் இணைந்து அனைத்திலும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்தியா 25 தங்கம், 9 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 38 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. தென் கொரியா 25 பத்தக்கங்களுடன் 2 வது இடத்தையும், உஸ்பெகிஸ்தான் 5 பதக்கங்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here