இந்தியா vs நியூசிலாந்து…, மழையால் தடைபட்ட முதல் T20 ஆட்டம்.., ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

0
இந்தியா vs நியூசிலாந்து..., மழையால் தடைபட்ட முதல் T20 ஆட்டம்.., ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!
இந்தியா vs நியூசிலாந்து..., மழையால் தடைபட்ட முதல் T20 ஆட்டம்.., ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது.

IND vs NZ:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடர்களில், டி20 போட்டிகள் முறையை, 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில், முதல் டி20 போட்டியானது இன்று நியூசிலாந்தின் வெலிங்டன் ரீஜினல் நடைபெற இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளம் படை நியூசிலாந்துக்கு எதிராக விளையாட தயாராக இருந்தது. ஆனால், போட்டி நடைபெறுவதற்கு முன் மழை பெய்ந்தால் டாஸ் போடுவதற்கு தாமதமானது. இதையடுத்து, மழையின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் வீரியம் அதிகரித்ததால் போட்டி, மழை காரணமாக ரத்தானது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் இவர் தான்.., இதை யாருமே எதிர்பார்கலையே!!

இதனால், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் விளைவால், மீதமுள்ள 2 போட்டிகளில் தொடர்ந்து வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். எனவே, நாளை மறுநாள் (20) நடைபெற உள்ள 2வது டி20 இரு அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here