
தமிழக அரசின் மின்வாரிய துறை மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் கணக்கிட்டு வருகிறது. மேலும் கட்டணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தும் படி கால கெடு கொடுத்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் கொடுத்த தேதிக்குள் மக்கள் கட்டணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மின் இணைப்பை மின்சார வாரியத்தின் ஊழியர்கள் துண்டித்துவிடுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு கடைசியாக ஒரு முன் அறிவிப்பை கொடுக்க மின்சார வாரியத்தின் பகிர்மான துறை முடிவெடுத்துள்ளதாம். அதன்படி வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பவும், அதோடு மின் இணைப்பை துண்டிக்கும் பட்சத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்குள் மீண்டும் மின்சார இணைப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாம்.
அரசு ஊழியர்களே.., இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும்.., வெளியான முக்கிய அப்டேட்!!