தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – வானிலை மையம் அறிவிப்பு..!

0
Raining
Raining

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வட மேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள காரணத்தால் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் வெப்பம் தணிந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கேரளாவை தொடர்ந்து ஹிமாச்சலில் – கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடிமருந்தால் சிதைந்த வாய்..!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், தமிழகத்தில் வடமேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் காலை 11.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை மக்கள் வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 48 மணிநேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here