அடுத்த 48 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0

தமிழகத்தில் தேனி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது அம்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக உள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்?

வெப்பசலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதில் பாதி அளவு தான் மழை கிடைக்கும். ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

இந்த காலக் கட்டத்தில் வட மாவட்டங்களில் வெப்பச்சலனம்- வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சில சமயங்களில் மழை பெய்யும். இந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி – 40-டிகிரி செல்சியஸை பதிவாகும்.

வெளியில் செல்வதை தவிர்க்கவும்:

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.00 மணி முதல் 3.00 மணி வரை வெளியில் செல்வதையும் வெளியே வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஏரனியல் பகுதியில் 4 செ.மீ மழையும், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here