மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை 5 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி.!

0

அனைத்து நாடுகளும் கொரோனவால் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக பணக்கார நாடுகளே இந்நோயால் பீதி அடைந்துள்ளன. மேலும் இந்த கொரோனாவிற்காக இரவு பகல் பாராது மருத்துவ துறையினர் உழைத்துக்கொண்டு உள்ளனர். எனவே செவிலியர், மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்கள்

உலகளாவிய சுகாதாரத்திற்கு ...

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது எதிராக ஏற்படும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை அபராதம் அளிக்க அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஜவடேகர். அப்பொழுது அவர் கூறியதாவது, ” கொரோனா தோற்று நோயிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையில் அவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் துரதிஷ்ட சம்பவங்களும் நடக்கின்றனர். இந்நிலையில் சுகாதார பணியாளர்களை தாக்குவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே சுகாதார ஊழியர்களை காக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த அவசர திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மேலும் சிறைத்தண்டனை, அபராதம் மட்டுமின்றி சுகாதார பணியாளர்கள் வாகனங்கள் மற்றும் கிளினிகுகளுக்கு சேதம் ஏற்பட்டால் அந்த சொத்தின் மதிப்பை விட இரு மடங்கு தொகை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வசூலிக்க படும். மேலும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றபின் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here