தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10ல் முதல்வர் அறிவிப்பு!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய தமிழக அரசு சார்பில் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகளில் சமூக இடைவெளி விதிகளுடன் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் தொடங்கப்படும் எனவும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இம்முறை நடைபெறாது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தாக நேற்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் அது தவறான தகவல் என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

minister sengottaiyan
minister sengottaiyan

லெபனான் குண்டு வெடிப்பு சென்னையிலும் நிகழுமா ?

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு முடிவடைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here