தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கொண்டைக்கடலை – வீடு தேடி வரும் டோக்கன்!!

0

நாளை முதல் (29.11.2020) அடுத்த மூன்று நாட்களுக்கு இலவச ரேசன் பொருட்களை பெற பொதுமக்களின் வீட்டிற்கே சென்று டோக்கன் வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த டோக்கன்கள் மூலமாக டிசம்பர் 2,3,4,5, தேதிகளிலும், மற்றும் 7,8,9,10 ஆகிய தேதிகளிலும் பொதுமக்கள் பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் பொருட்கள்:

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன்பொருட்கள் வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக ,பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் இலவச ரேசன் பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்கபணம் என ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த அத்தியாவசிய பொருட்களை அரசு டோக்கன் மூலமாக வீடுகளுக்கே சென்று வழங்கியது. அதற்குப்பின் வந்த மாதங்களிலும் இந்த டோக்கன் முறை நடைமுறையில் இருந்தது. இப்போது, டிசம்பர் மாதத்திற்கான இலவச பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை டோக்கன் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாள் ஒன்றிற்கு தலா 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்கள் டிசம்பர் 2 முதல் தங்கள் அருகில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று தங்களது டோக்கன் மூலமாக ரேஷன் பொருட்களை சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும், PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதிலாக கொண்டக்கடலையுடன் சேர்த்து மற்ற பொருட்கள் வழங்கப்படும் எனவும், NPHH அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பை இலவசமாகவும் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here