தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்., எப்போது? அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தகவல்!!!

0

தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி உட்பட உணவுப் பொருட்களுடன், வெளிநாடுகளில் இருந்து பாமாயிலையும் இறக்குமதி செய்து விநியோகித்து வருகின்றனர். இந்தியாவில் விளையாத பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் நிலக்கடலை எண்ணெயை விநியோகம் செய்தால், தமிழக விவசாயிகள் பயனடைவார்கள் என நீண்ட காலமாக அரசிடம் விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மீண்டும் உயிருடன் வரும் மேக்னா.., அர்ஜுனுக்கு காத்திருக்கும் ஆப்பு?? தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில் , “விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் ரூ.115 முதல் ரூ.120 என 89 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது பரிசீலனையில் உள்ளதால், விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும்.” எனக் கூறியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here