தமிழக காவல்துறைக்கு 8,538 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு – பயிற்சியில் சேர தேதி அறிவிப்பு..!

0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்த 8,538 விண்ணப்பதாரர்கள் வரும் மே 3ம் தேதி பயிற்சியில் சேருமாறு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரன்சின்கா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழக காவல்துறை:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் சார்பில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது. அதில் தேர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியும் நடந்து முடிந்தது. அதற்கடுத்து பிப்ரவரி 4ம் தேதி தற்காலிக தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் 2,410 பேர் மாவட்ட & மாநகர ஆயுதப்படை பணிக்கும், 5,962 பேர் தமிழக சிறப்பு காவல் படைக்கும், 191 பேர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தரவரிசைப் பட்டியல்:

இவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பிரிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அதில் தேர்வான 8,358 பேர் வரும் மே 3ம் தேதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அளிக்கும் தகவலின் படி காலை 7 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பயிற்சி பள்ளியில் சேர்வதற்கு முன் அவர்களுக்கு சுவாச பிரச்னை, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னரே அவர்கள் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here