கொரோனா வைரஸ் தாக்கத்தின் புதிய அறிகுறிகள் – அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் அறிவிப்பு

0

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் பட்டியலில் (காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி) இல்லாத புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் (சிடிசி) கண்டுபிடித்து வெளிட்டு உள்ளது. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி தெளிவுபெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

கொரோனா தாக்கம்:

உலகளவில் அமெரிக்கா தான் கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இந்த வைரஸ் குறித்து அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் மிக தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு உள்ளது.

அதில் நமக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான 5 புதிய அறிகுறிகளை சிடிசி கண்டறிந்து உள்ளது. நமது உடலில் வைரஸ் தாகத்திற்கு பின்னர் இரண்டு முதல் 14 நாட்களுக்கு அடுத்து இந்த அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் விபரம்,

  • காரணமின்றி உடல் குளிர்வது போன்று உணர்தல்
  • காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல்
  • கடுமையான வேலை செய்யாத நிலையிலும் தசை வலி ஏற்படுதல்
  • திடீரென தோன்றும் தலைவலி
  • சுவை மற்றும் வாசனை உணர்வு குறைந்துபோதல்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here