தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து முதல்வர் அவர்கள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் கிடுகிடுவென உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுவும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Conference
Conference

நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் – மத்திய அரசு தகவல்..!

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? அல்லது மேலும் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மருத்துவக் குழுவின் பரிந்துரை மற்றும் மத்திய அரசின் முடிவுகளை பொறுத்து முடிவு செய்யப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள காரணத்தால் மேலும் 15 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் அல்லது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here