தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

0

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்க, தமிழக அரசால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக கலெக்டர்கள் உடனான ஆலோசனை முடிவில், திரை அரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது நிபந்தனையுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதாரத்தை மீட்டு எடுக்க, மாதம் தோறும் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருப்பினும், திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. இது ஒட்டு மொத்த திரைப்படத்துறையை பாதித்துள்ளது. இதைப்போல, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் பாடம் படித்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

புதிய தளர்வுகள்:

இம்மாதம் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. இது நவம்பர் 1 முதல் அமல்படுத்தபடும். இது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!

CM Meeting
CM Meeting

இதன் பின், முதல்வர் பிற்பகலில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார். முடிவில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும். தீபாவளி பண்டிகை நெருங்குவது மற்றும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால் திரை அரங்குகள் திறக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு பொது தேர்வு நடக்கும் என்பதால், பள்ளிகள் திறக்க அனுமதி கிடைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here