சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
Flight

கொரோனா தொற்று காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடைக்காலம் நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து:

கடந்த மார்ச்சில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு துவங்கியது. இதன் காரணமாக, மக்கள் கூடுவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. விமானம், சாலை, ரயில் போக்குவரத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. இதன் பின், கொரோனா தொற்று சற்று குறைந்தாலும், மத்திய அரசு போக்குவரத்தை முழுவதுமாக அனுமதிக்கவில்லை. கடந்த செப்டம்பரில், இந்தியாவுக்கு வரும், இந்தியாவிலிருந்து செல்லும் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வரும் 31ம் தேதியுடன் தடை முடிய உள்ள நிலையில், தற்போது தடைக்காலம் வரும் நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

flight
flight

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,’ சரக்கு போக்குவரத்து, ஏற்கனவே திட்டமிட்ட விமான பயணத்திற்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உள்ளூர் போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை. கடந்த 25ம் தேதி முதல் வரும் மார்ச் 27 வரை 12 ஆயிரத்து 983 உள்ளூர் விமானங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், அனுமதிக்கப்பட்ட மொத்த விமானங்களின் 55 சதவீதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here