தமிழகத்தில் ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதல்வர் அனுமதி!!

0
Handsome man exercise with dumbbell in the gym

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்) திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரகள் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஜிம்கள் திறப்பு:

இந்தியாவில் ‘அன்லாக் 3.0’ ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5 முதல் ஜிம்கள், யோகா மையங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுது அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஜிம்களை திறந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

cmo of tamilnadu
CMO of TamilNadu

‘ஓ மை கடவுளே’ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு – படக்குழுவினர் மகிழ்ச்சி!!

இது குறித்து வெளியான அரசாணையில், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலித்த முதல்வர், ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 50 மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிபாட்டு செயல்முறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அதனை கட்டாயம் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here