தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு?? அமைச்சர் விளக்கம்!!

1

தமிழகத்தில் இனி மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மின் கணக்கீடு:

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின் கட்டண அளவீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. பலரும் எதிர்பாராத அளவு தங்களது வீட்டிற்கு மின் கட்டணம் வந்துள்ளதாக கூறினர். இதற்க்கு விளக்கம் அளித்த தமிழக அரசு அனைவரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருப்பதால் அதிகளவு மின்சாரம் உபயோகிக்கப்பட்டு கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. ஊரடங்கு காலம் என்பதால் முந்தைய மாத கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Minister Thangamani
Minister Thangamani

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்!!

தமிழகத்தில் அரசு மானியம் இருப்பதால், முதல் 100 யூனிட்டுக்கு குறைவான மின் பயனாளிகளுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. 101 – 200 யூனிட் வரை 1.50 ரூபாயும்,200 முதல் 500 யூனிட்டுக்குள் வாடிக்கையாளர்களுக்கு முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை. அதன்பின் 101 – 200 வரையிலான யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாயும், 201 – 500 யூனிட்களுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. தற்போது ஒரு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

1 COMMENT

  1. கொரானாவை காரணம் காட்டி கணக்கெடுப்பைஆறுமாதமாக்கி நூறுயுனிட் தள்ளுபடிகொடுத்துட்டு 500யூனிட் மேல அனைவருக்கும் யூனட் ரு10 /நிர்ணயம்செய்தால்வருமானம் கொட்டுமுல வர எலக்சன்வரைக்குமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here