கொரோனாவில் இருந்து குணமடைந்த தம்பதி தற்கொலை – ஊர் மக்கள் ஒதுக்கியதால் விபரீத முடிவு!!

0
suicide corona fear
suicide corona fear

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பனிராஜ் என்பவரது தாய்க்கு கொரோன தொற்று இருந்து கொரோனாவால் உயிரிழந்தார். தாயின் மூலம் மகனான பனிராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் தொற்று பரவி பரிசோதனையின் போது தொற்று உறுதியானது.எனவே கொரோனாவின் அச்சத்தால் பனிராஜ் அவரது மனைவியும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்கொலை செய்துகொண்ட தம்பதியர்

 

paniraj
paniraj

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பனிராஜ் தாயார் (அறியப்பட்ட ஆஸ்துமா நோயாளி) கொரோனா தொற்றால் உயிரிழந்தார், பின் தொற்று பனிராஜ்க்கும் அவரது மனைவிக்கும் பரவியது பின் இருவரும் ஜூலை 26 அன்று அவர்கள் கோவிட் -19 நேர்மறையை பரிசோதித்ததையடுத்து, அனந்தபூரில் உள்ள நாராயணா கல்லூரி சி.வி.ஐ.டி பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு ஜூலை 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.பின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இருவரும் பனிராஜ் தாயார் உயிர் இழந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் அவரும் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு 12 வயது மகன் இருந்துள்ளார், தற்பொழுது பெற்றோர்கள் இல்லாத நிலையில் சிறுவன் ஆதரவற்ற நிலையில் உள்ளார்.

andhra couple
andhra couple

இதுகுறித்து தர்மாவரம் காவல்துறை இணை ஆணையர் ரமாகாந்த் கூறிதாவது:பனி ராஜ் மற்றும் சிரீஷா தம்பதியினருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கான சிகிசசைகள் முடிவடைந்த பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு இருந்த சமயத்தில்தான் ஊர் மக்கள் பேசாமல் ஒதுக்கி உள்ளனர். நேற்று பின்னிரவு 2.45 மணியளவில் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது என்று’கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here