உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?? காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேள்வி!!

0

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறுகையில், அரசின் பொது நிறுவனங்களுக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) “பொது நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டுமென்றால் சக்திவாய்ந்தவர்களின் ஆதரவு” தேவை என பதிவிட்டு உள்ளார். இது கொரோனா உறுதி செய்யப்பட்ட உள்துறை அமைச்சர் ஏன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை மேற்கோளிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

சசி தரூர் கேள்வி:

ட்விட்டரில் பதிவிட்டு உள்ள சசி தரூர் “உண்மை. எங்கள் உள்துறை மந்திரி, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, ​​எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை, ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என்று யோசித்துப் பாருங்கள்” என பதிவிட்டு உள்ளார்.

நேற்று மாலை கொரோனா உறுதி செய்யப்பட்ட உள்துறை அமைச்சர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் -19 மையங்களுக்கு ஆய்வு செய்ய அமித் ஷா சென்று வருகிறார். இந்த நோய் உறுதி செய்யப்படும் மத்திய அமைச்சரவையின் முதல் உறுப்பினர் இவர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த தம்பதி தற்கொலை – ஊர் மக்கள் ஒதுக்கியதால் விபரீத முடிவு!!

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவையின் முக்கியமான கூட்டத்தில் உள்துறை அமைச்சர் கலந்து கொண்டார், இதில் பிரதமர் நரேந்திர மோடி, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் பல உயர் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் புதிய தேசிய கல்வி கொள்கையை அறிவித்தது.

Shashi Tharoor & Amith Shah
Shashi Tharoor & Amith Shah

அமித் ஷாவைச் சந்தித்த சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மற்றும் மாநிலங்களவை எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர் என்றார். இதில் கடந்த சில நாட்களாக அமித் ஷா சந்தித்த மற்றவர்களில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா, ஹரியானா பாஜக தலைவர் ஓ பி தங்கர் மற்றும் குஜராத் பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல் ஆகியோர் அடங்குவர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று முன்னதாக, தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சனிக்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததால், அவர் தனிமையில் சென்றுவிட்டார் என்று கூறினார். பிரசாத் எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை மற்றும் சுய தனிமை என்பது ஏற்கனவே இருக்கும் நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here