தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் & மாநகராட்சி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி!!

1

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோவில்கள் திறப்பு:

தமிழகத்தில் 7வது முறையாக ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இம்முறை முன்னர் ஊரடங்கு நீட்டிக்கப்ட்ட பொழுது வழங்கப்பட்ட தளர்வுகளைப் போன்று அதிகப்படியான தளர்வுகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தற்போது பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அரசு அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

driving schools
driving school

தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று – ஒரே நாளில் 119 பேர் பலி!!

இந்நிலையில் ஏற்கனவே கிராமப்புற பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சென்னை உட்பட பிற மாவட்ட மாநகராட்சி எல்லைப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் அரசு ஏற்கனவே அறிவித்து உள்ள நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

1 COMMENT

  1. E pass is not necessary, it is difficulty to ordinary people,fever checking, oxcition checking instruments need to check the people in district boundaries, thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here