டாக்டரிடம் கெஞ்சிய பெண் “கொரோனா ஹாட் ஸ்பாட் ” – கோவையில் நடந்த கோர சம்பவம்!!!

0

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இரத்த சொந்தத்திற்க்காக தங்களை காப்பாற்றும்  படி டாக்டர் காலில் விழுந்து கெஞ்சும் உறவுகள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

டாக்டரிடம் கெஞ்சிய பெண்:

கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 வயது பெண்; ”அய்யா! என் புள்ளைங்க மூணு பேரையும் பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்துருக்கேன்யா… என் வீட்டுக்காரரும் விட்டுட்டுப் போயிட்டாருங்கய்யா… ரொம்பவும் முடியலை… மூச்சுத் திணறுதுய்யா… எனக்காக இல்லாட்டாலும் எம்புள்ளைகளுக்காக நான் உசுரோட இருக்கணும்யா” என்று கூறி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் காலில் விழுந்து கெஞ்சும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இன்னொரு புறம் ஓய்வு பெற்ற உளவுத்துறை போலீஸ்; தனது மகனுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறான்; அவனுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்தித் தருமாறு; மகனுக்காக தந்தை டாக்டரின் காலில் விழுந்து கதறுகிறார். இதனால் மனமுடைந்த டாக்டர் படுக்கை வசதி இல்லாத காரணத்தால்; ஒரு ஆக்சிஜன் சிலிண்டரைக் கொடுத்து; அட்மிஷன் கிடைக்கும் வரையில் ஆம்புலன்சில் வைத்து பயன்படுத்திக்கொள்ளுமாறு; டாக்டர் அனுப்பி வைக்கிறார். எங்குமே அட்மிஷன் கிடைக்காததால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை; என்று இரண்டு குழந்தைகள், இளம் மனைவியும் கதறி அழுதார்கள்.

இப்படி ஒன்றிரண்டில்லை; கோவையில் தினமும் எல்லா பகுதிகளிலும் இருந்து இப்படி மனதை உலுக்கும் மரணச்செய்திகள் வந்து குவிகின்றன. மேலும் அரசு, தனியார் மருத்துவமனை என அனைத்திலும் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைப்பது, மிகவும் கடினமாக உள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்; என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். ஆனால் இதுவரையும் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை உடனடியாக கவனித்து அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here