இந்தியாவில் நேற்று வரை 33.25 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை – ICMR தகவல்!!!

0

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நேற்று வரை இந்தியாவில் 33,25,94,176 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 20,58,112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில் இந்தியத் தலைநகரம் டெல்லி உட்பட பல நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கமும் இந்த கொடிய தொற்று நோயின் அச்சுறுத்துதலை படிப்படியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளான ஊரடங்கு மற்றும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேசமயம் இந்த கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளது.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று வரை பரிசோதனை செய்யப்பட்ட இந்தியாவில் கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 33,25,94,176 போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here