தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து..? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!

3
exams
exams

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

கல்லூரி தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்பு பெற்றோர்களின் கோரிக்கைகள் மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளால் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கு ஆன பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா? என்கிற கோரிக்கை வலுவடைந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சென்னையில் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா..? தமிழக அரசு ஐகோர்ட்டில் விளக்கம்..!

இது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். பல கல்லூரிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் தேர்வுகள் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

3 COMMENTS

  1. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. எல்லாரும் கல்லூரி ஆல் பஸ் பண்ணலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here