தமிழக முதல்வர் தனிச்செயலாளர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் தலைமை செயலகம்..!

0
தலைமை செயலகம்
தலைமை செயலகம்

கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில், ஊரடங்கு நீடித்தாலும், கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona virus
corona virus

இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் கூடி வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி சுமார் 1,500ஐ தாண்டும் நிலை ஏற்பட்டது.

தாமோதரன்

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.

edappadi-palanisamy
edappadi-palanisamy

சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிச்செயலாளர் உடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here