பயிர்களுக்கான கடன் தள்ளுபடி திட்டம் – முதலமைச்சர் இன்று துவக்கம்!!

0

விவசாயிகளின் பயிர்கடனை ரத்து செய்துள்ள தமிழக அரசு அதற்கான திட்டத்தை இன்று துவங்கி வைக்க உள்ளது. தொடர்ந்து 12 அரசு துறைகளை சார்ந்த திட்டங்களையும் இன்று முதலமைச்சர் பழனிச்சாமி துவங்கி வைக்கவுள்ளார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கடன் தள்ளுபடி திட்டம்

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்களுக்கான கடனை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ரசீது பத்து நாட்களுக்குள்ளாக விவசாயிகளுக்கு கிடைக்கும் என அறிவித்திருந்தார் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி. இந்நிலையில் இன்று நடைபெறப்போகும் அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் பழனிச்சாமி.

#INDvsENG 2வது டெஸ்ட் – டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்! கில் ஏமாற்றம்!!

இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பல்வேறு அரசு துறைகளுக்கான நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் பழனிச்சாமி. தொடர்ந்து 11.30 மணியளவில் தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் குறைதீர் மைய தொலைபேசி எண் (1100) என்ற செயல்பாட்டை துவங்கி வைக்கவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு துறைகளான பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல்துறை, நெடுஞ்சாலைகள், எரிசக்தித்துறை, பள்ளிக்கல்வி, சுகாதாரம், வருவாய், சுற்றுலா, வேளாண்மை, வணிகவரிகள், பதிவுத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களை திறந்தும் சில கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தொல்லியல்துறை சார்பாக, கீழடி அகழாய்வு பணிகளையும் துவங்கி வைக்க உள்ளார் முதல்வர். அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here