தலைசிறந்த பெண்மணிகளுக்கான விருது – காணொளி மூலம் விருது பெற்ற தமிழிசை சவுந்தரராஜன்!!

0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமேரிக்காவில் உலகில் தலைசிறந்த பெண்மணிகளுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

தமிழிசை சவுந்தரராஜன்:

நேற்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சர்வதேச அளவில் நேற்று பெண்களை அனைவரையும் மிக சிறப்பான முறையில் போற்றினர். இந்நிலையில் ஆண்டு தோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கும் பெண்மணிகளுக்கு விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு அறிவித்தது. இந்த விழா அமெரிக்காவில் உள்ள இல்லினாயிசில் நடந்தது. இந்த விழாவில் உலகின் தலை சிறந்த பெண்மணிகளுக்கான விருது 20 பேருக்கு வழங்கப்பட்டது. அதில் ஒருவர் தான் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருது வழங்கப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்த விருதினை தமிழிசை புதுவையில் இருந்த படி காணொளி மூலம் பெற்றுக்கொண்டார். பின்பு பேசிய அவர், இந்த விருது பெண்கள் முன்னேற்றம் குறித்த எனது பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த விருதினை நான், குடும்பங்கள் நாடு என அயராது உழைக்கும் பெண்மணிகளுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார். உலகின் தலை சிறந்த பெண்மணிகளின் விருதை தமிழிசையை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here