வங்கதேசத்தின் 50வது சுதந்திர விழா – நீண்ட மாதங்களுக்கு பின் வெளிநாடு பறக்கும் மோடி!!

0

வங்கதேசத்தின் 50வது சுதந்திர விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர் சுமார் 15 மாதங்களுக்கு பின்பு வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி:

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காணமாக பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதையும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழக்கத்திற்கு பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு வருகை தந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவலுக்கு பின்பு அவர் தமிழகத்திற்கு வந்தது அதுவே முதன்முறை. மேலும் அவர் இன்னும் சில நாட்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சுமார் 15 மாதங்களாக பிரதமர் மோடி கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். தற்போது 15 மாதங்களுக்கு பின்பு அவர் வெளிநாடுகளுக்கு செல்கிறார். அதன்படி வங்கதேசத்தில் இந்த ஆண்டு 50வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு பிரதமர் மோடி செல்கிறார், அதன்படி அவர் வருகிற 26ம் தேதி வங்கதேசத்திற்கு பறக்கிறார். அங்கு சென்ற அவர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதனை தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மோடி இருவரும் சேர்ந்து தாஹா – மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணியர் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here