தெலுங்கானாவில் சிந்து விவா என்ற பெயரில் ரூ.1,500 கோடி மோசடி – காவல்துறையினர் அதிரடி கைது!!

0

தெலுங்கானாவில் வீட்டிலிருந்து கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற வகையில் செயல்படக்கூடிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் 1,500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடி வழக்கு

மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தி, அதில் உறுப்பினராகி, அதே நிறுவனத்தில் நாம் சேர்த்து விடும் ஒவ்வொரு நபர் மூலமாகவும் வருவாய் கிடைப்பது ஆகும். இந்த வகையில் பெங்களூரை சேர்ந்த சிந்து விவா என்ற நிறுவனம் 1,500 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஹைதெராபாத் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணயில் ஈடுபட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புடவையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த அனிகா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த அபிலாஷ் தாமஸ் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் 10 லட்சத்திற்கும் அதிகமானோரை ஏமாற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. பல்வேறு கிளைகளை கொண்ட இந்நிறுவனத்தில் தெலுங்கானாவில் மட்டும் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் தெலுங்கானா அரசு ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 20 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here