தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பரவல் எண்ணிக்கை தற்போது அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசிடம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து, தற்போது வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. இந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் 8,54,554 கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

சந்தியாவின் மீது வீண் பழி போடும் சரவணனின் குடும்பம் – தப்பிப்பாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

Coronavirus India Delhi Mumbai Bengaluru Covid-19 Live Latest Updates Corona Vaccine Symptoms News UK | The Financial Express

அதில் 12,517 பேர் மரணம் அடைந்துள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக தான் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது வரை 1 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. ஆனால், தற்போது பல நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் குறிப்பாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் உயர்ந்து வந்துள்ளது. இதனால் அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் 1.45 சதவிகிதமாக இருந்த தொற்று விகிதம் 1.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here