
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 13) தொடங்கியது. இந்த தமிழ் முதல் தாள் தேர்வை எழுத சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். எனவே தமிழ்நாடு முழுவதும் 3225 தேர்வு மையங்களில் கண்காணிப்பு ஆசிரியராக 46,870 பேர் நியமிக்கப்பட்டனர். மேலும் பறக்கும் படை, நிலையான படை என 4,235 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த மொழிப்பாடத் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை நேற்று தெரிவித்தது. இதையடுத்து இது குறித்த நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தலைமை ஆசிரியர்கள் காரணங்களை கண்டறிந்து இனி வரும் தேர்வுகளை தவற விடாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்புக்கான வினாத்தாள் ஆன்லைனில் விநியோகம்., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!
அதேபோல் இவர்களுக்கு மீண்டும் மொழிப் பாடத் தேர்வு எழுத மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து இந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற உள்ள துணை தேர்வில் மீண்டும் வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.