தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

0

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் தற்போது பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது தமிழகத்தில் பதவியில் இருந்த தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சனை வேறு பதவிக்கு மாற்றியுள்ளார்.

தலைமை செயலாளர்:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைபிடித்தது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். பதவி ஏற்ற பின்பு ஸ்டாலின் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவை அனைத்தும் அவர் பிரச்சரத்தின் பொழுது மக்களிடம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் மற்றொரு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் திகழ்ந்து வந்தார். இவரது ஆட்சி காலம் முடிவதற்கு இன்னும் 3 மாத காலம் உள்ளது.

tn talamai seiyalagam
tn talamai seiyalagam

மும்பை தாதா சோட்டா ராஜன் மரணம் – கொரோனா தொற்றினால் ஏற்பட்ட விபரீதம்!!

இந்நிலையில் இவரை முதல்வர் ஸ்டாலின் காகித நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்துள்ளார். மேலும் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களை நியமித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை நிலைமை மற்றும் பயிற்சி துறை தலைவராக பணியாற்றி வந்தார். தற்போதைய நிலைமையில் தமிழக அரசு துரிதமாகவும் மற்றும் விரைவாகவும் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here