தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு??அமைச்சர் தகவல்!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்பு மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகள் மட்டுமே நடத்தி வந்தது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா குறைந்ததால் உயர்கல்வி வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி முழுமையாக செய்யாமல் சம்பளம் முழுமையாக வாங்குவதாக தொடர்ந்து கேள்விகள் எழும்பி வந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4,209 பலி – இந்தியாவில் தொடரும் சோகம்!!

இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, முன்கள பணியாளர்களை விட ஆசிரியர்கள் அதிக அளவில் சம்பளம் வாங்குவதாகவும், எனவே இதன் காரணமாக ஆசிரியர்கள் சம்பளத்தை குறைத்து கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிக படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல் வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்த முடிவை முதல்வர் எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here