12 ஆண்டுகளுக்கு பின் அண்ணன் வீட்டுக்கு செல்லும் தம்பி – உருகும் உடன்பிறப்புகள்!!!

0

முதல்வர் ஸ்டாலின் 12 ஆண்டுகளுக்கு பின் தனது அண்ணனான அழகிரி வீட்டுக்கு செல்கிறார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்:

இன்று கொரோனா பணிகளை ஆய்வு செய்ய மதுரைக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா பணிகளை ஆய்வு செய்யும் தமிழக முதலமைச்சர் இன்று பிற்பகல் தனது சகோதரர் அழகிரியின் இல்லத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள்  எழுந்துள்ளன.

2009ல் திருமங்கலம் இடைத்தேர்தலின் போது மத்திய அமைச்சராக அழகிரி இருந்த போது மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். தற்போது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் தனது அண்ணன் வீட்டிற்கு செல்கிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நில குறைவுக்கு பின்னர் அண்ணன் அழகிரிக்கும்; தம்பி ஸ்டாலினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதற்கு பின் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். தேர்தல் ரிசல்டின் போது அண்ணன் என்ற முறையில் என் தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று அழகிரி கூறினார். அதை ஏற்ற ஸ்டாலின் தனது பதிவியேற்பு நிகழ்ச்சிக்கு அழகிரி குடும்பத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்; அவர்களும் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து இன்று கொரோனா பணிகளை ஆய்வு செய்ய வரும் ஸ்டாலின்; மதியம் 12 மணிக்கு மேல் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு செல்கிறார், மேலும் ஸ்டாலினின் மத்திய உணவுக்கு அழகிரி வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here