கொரோனா பரவல் எதிரொலி – காஞ்சிபுரத்தில் வேகமாக நிறையும் மருத்துவமனை படுக்கைகள்!!

0

தமிழகம் முழுவதும் கொரோன 2ஆம் அலையின் பரவல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாகுறை நிலவி வந்தது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்:

கொரோனா வார்டுகளில் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கொரோனா பாதிக்க பட்டவருகளுக்கு தமிழக அரசு சிகிச்சை அளித்து வருகின்றது. அதன் படி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 612 படுக்கைகளில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள 235 படுக்கைகள் உட்பட, மொத்தத்தில் 562 படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதன் மூலம் தமிழகத்தில் இனிமேல் ஆக்ஸிஜன் படுக்கை இல்லாத சூழல் ஏற்படும் நிலை உருவாகும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, கொரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசால் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல சிகிச்சை மையத்தில் 347 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்க உள்ளன. இந்த மையம் விரைவில் முடிக்க பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொது 6 கிலோ லிட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கூடுதலாக 10 கிலோ லிட்டர் ஆக்சிஜன் வசதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் நோயாளிகளுக்கு எந்த வித தாமதமும், தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here