மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா??கங்குலி விளக்கம்!!

0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் காரணமாக 14வது ஐபிஎல் சீசன் நடுவிலே நிறுத்தப்பட்டு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுமா என்பது குறித்து கங்குலி விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல்:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா தொற்றினால் தற்போது விளையாட்டு துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைத்து வீரர்களின் நலன் கருதி தற்போது ஐபிஎல் மெகா தொடர் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது சொந்த நாட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் எப்போது எங்கு நடைபெறும் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பும் வண்ணம் இருந்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஐதராபாத்தில் முடிவுக்கு வந்த அண்ணாத்த படப்பிடிப்பு – சென்னை திரும்பும் சூப்பர்ஸ்டார்!!

தற்போது இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, இந்தியாவில் மீதமுள்ள ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தற்போது இந்த தகவலினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைவில் போட்டி நடத்துவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here