அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவை வெளியிட வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு!!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவை சில பல்கலைக்கழகங்கள் வெளியிடாமல் உள்ளன. இவர்கள் முதுகலைப்படிப்பிற்கு செல்ல முடியாமல் தவிப்பதால், அரியர் முடிவை விரைவில் அறிவிக்க தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தவிக்கும் மாணவர்கள்

கொரோனா தொற்று மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது. கல்லூரிகள் திறக்க முடியாத காரணத்தால், இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களை தேர்ச்சி மதிப்பெண் அளிக்குமாறு உத்தரவிட்டது. இதை சில பல்கலை பின்பற்றவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால், உயர் கல்விக்கு செல்ல முடியாமல் அரியர் மாணவர்கள் தவிக்கின்றனர். கல்லூரிகளில் உயர்கல்விக்கு காலியிடம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அரியர் தேர்ச்சி முடிவை விரைவாக அறிவிக்க தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி, பல்கலை விரைவில் அரியர் தேர்ச்சி குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here