விஜய் பட பிரபலம் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

0
விஜய் பட பிரபலம் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்! ரசிகர்கள் கண்ணீர்!!
விஜய் பட பிரபலம் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான கே. முரளிதரன் இன்று மதியம் திடீரென உயிரிழந்தார்.

திடீர் மறைவு:

தமிழ் சினிமாவில், கடந்த 1994 ஆம் ஆண்டு லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் , தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே. முரளிதரன். இவர் கமல், விஜய், சிம்பு மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவன் தயாரிப்பில் வெளிவந்த உன்னை நினைத்து, சிலம்பாட்டம், பகவதி, அன்பே சிவம்,புதுப்பேட்டை போன்ற அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் கடைசியாக ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் படத்தை தயாரித்திருந்தார். அதன் பிறகு வயது மூப்பு காரணமாக, இவர் எந்த படங்களையும் தயாரிக்கவில்லை. தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், விநியோஸ்தராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நபராகவும் திகழ்ந்து வந்தார்.

மீண்டும் ஜனார்த்தனனால் மறைமுகமாக வந்த பிரச்சனை.., வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா மீனா!!

கும்பகோணத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் இன்று மதியம் 1:30 மணி அளவில் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு, தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here