Monday, April 29, 2024

wagon r 2019 model

மாருதி வேகன்ஆர் கார் விற்பனையில் புதிய சாதனை

விற்பனையில் இந்தியாவில் டாப் 5 கார்களில் ஒன்றாக மாருதி வேகன்ஆர் கார் இடம்புடித்துள்ளது.  நகர்புறத்தில் பயன்படுத்துவதற்கு சிறந்த பட்ஜெட் மாடல் கார் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.  இதன் சிறப்பம்சங்கள்: அடக்கமான வடிவம், போதுமான வசதிகள், அதிக ஹெட்ரூம் இடவசதி மற்றும் காரின் விலை ஆகியவை இதன் விற்பனைக்கு முக்கிய காரணமாகும்.  கடந்த ஜனவரி மாதம் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக வந்தது. அத்துடன் வழக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டுமின்றி, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்விலும் வந்தது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்தது. விற்பனையில் புதிய சாதனை: அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் வரை 1,03,325 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இம்மாதம் மேலும் 14,650 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 29.5 சதவீதம் அதிகம் ஆகும். திறன் மற்றும் விலை விபரம்: காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் – பகுதி 10

  TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் - பகுதி 10 https://www.youtube.com/live/1OhOj_Xau6U?feature=shared
- Advertisement -spot_img