Saturday, April 27, 2024

trending in twitter

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்!!

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யபட்டு 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி சமூக வலைதளமான ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னைக்கு வரும் போது கொல்லப்பட்டார். அவரது...

ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – ரூ. 65.5 கோடி பரிசு

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசகு மேசவா. இவர் ஜப்பானின் சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். பல கோடிகளுக்கு சொந்தக்காரரான அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான நடைமுறைகளால் உலகை ஆச்சர்யப்படுத்துவார். 1000 பேருக்கு ரூ. 65.5 கோடி பரிசு இவர் கடந்த புத்தாண்டு ஜனவரி 1 அன்று ட்விட்டரில்...

மூன்றாம் உலகப்போர் அபாயம் – டுவிட்டரில் ட்ரெண்டிங்

அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் ட்விட்டரில் மூன்றாம் உலகப்போர் குறித்த அபாயத்தையும், அதுதொடர்பான மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்கா - ஈரான் தாக்குதல்: ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அப்படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஹிஸ்புல்லா படையினர் சூறையாடினர். இந்த தாக்குதல்களுக்கான தண்டனையை ஈரான் எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் மத்திய-கிழக்கு பகுதியில் 750 வீரர்களை நிலைநிறுத்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டார். ஈரான் படைத்தளபதி கொலை: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. டுவிட்டரில் ட்ரெண்டிங்: இந்நிலையில், ட்விட்டரில் World War 3 ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.  இது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., பணிநிரவல் கலந்தாய்வு குறித்த அப்டேட்? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளனர்....
- Advertisement -spot_img