Monday, May 20, 2024

ar rahman tamil movies

இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலிப்குமார் To எ ஆர் ரஹ்மான்

இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலிப்குமார் To எ ஆர் ரஹ்மான் https://youtu.be/TzGAEHLh310

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் விழா – ரசிகர்கள் கொண்டாட்டம்

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 53 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார்.  இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #HappyBirthdayARRahman என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.  இந்நிலையில் அவரது வாழ்க்கை குறித்த விசயங்களையும், அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இங்கே காண்போம். ஆரம்ப கால இசைப்பயணம்: ரகுமான் தனது ஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார். திரைப்பட இசையமைப்புகள்: ஏ.ஆர். ரஹ்மானின் தலைக்கனம் இல்லாத பேச்சுகளும், நடைமுறைகளும் பலரையும் வெகுவாக கவர்ந்தன. 1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன. முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் பெற்ற விருதுகள்:      1. இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது.      2. 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.      2. இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.      3. மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.      4. ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார். சிகரமாக, இந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது.      5....
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில்,...
- Advertisement -spot_img