T20 உலக கோப்பையில் ஹாட்ஸ்பாட் ஏன் பயன்படுத்த வில்லை?? ஆதங்கத்தில் ஆகாஷ் சோப்ரா!!

0
T20 உலக கோப்பையில் ஹாட்ஸ்பாட் ஏன் பயன்படுத்த வில்லை?? ஆதங்கத்தில் ஆகாஷ் சோப்ரா!!
T20 உலக கோப்பையில் ஹாட்ஸ்பாட் ஏன் பயன்படுத்த வில்லை?? ஆதங்கத்தில் ஆகாஷ் சோப்ரா!!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பயன்படுத்திய ஹாட்ஸ்பாட் தொழில்நுட்ப முறையை ஏன் டி20 உலக கோப்பையில் பயன்படுத்த வில்லை என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹாட்ஸ்பாட் தொல்நுட்பம்:

டி20 உலக கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியானது, இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்தது. இதில், டேவிட் மாலன் 134 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர் 86, டிராவிஸ் ஹெட் 69 ரன்களுடன் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கி விளையாடினார். இதில், ஸ்மித் எதிர்கொண்ட ஒரு பந்து பேட்டின் முனையில் பட்டு கீப்பர் கையில் சென்றது போல் இருந்தது. ஆனால், இதற்கு நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை.

ஹாட்ரிக் சாதனை படைத்த தமிழக வீரர்…, இந்திய அணிக்கு தொடக்கம் தரப்போவது எப்போது??

பின்பு ஹாட்ஸ்பாட் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி சந்தேகத்தை தீர்த்து கொண்டு ஸ்மித் தொடர்ந்து விளையாடினார். ஹாட்ஸ்பாட் முறையானது, சில சமயங்களில் பந்து பேட்டின் எட்ஜில் பட்டது போல் சவுண்ட் மட்டும் கேட்கும். அதனை கீப்பர்கள் பிடித்து விட்டால் நடுவர்கள் அவுட் கொடுப்பார்கள். இந்த தவறான முடிவை தடுப்பதற்கு தான் ஹாட்ஸ்பாட் தொழில்நுட்ப முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இதனை 2022 டி20 உலகக் கோப்பையில் ஏன் பயன்படுத்தவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here