ஹாட்ரிக் சாதனை படைத்த தமிழக வீரர்…, இந்திய அணிக்கு தொடக்கம் தரப்போவது எப்போது??

0
ஹாட்ரிக் சாதனை படைத்த தமிழக வீரர்..., இந்திய அணிக்கு தொடக்கம் தரப்போவது எப்போது??
ஹாட்ரிக் சாதனை படைத்த தமிழக வீரர்..., இந்திய அணிக்கு தொடக்கம் தரப்போவது எப்போது??

விஜய் ஹசாரே டிராபியில் கோவா அணிக்கு எதிராக தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் சதம் அடித்ததுடன் ஹாட்ரிக் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி:

கடந்த 12ம் தேதி முதல் இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி தொடர் 38 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் Cயில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு அணி, இன்று கோவா அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், டாஸ் வென்ற கோவா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள், முதல் விக்கெட்டுக்கு 276 ரன்கள் சேர்த்து நல்ல ஒரு அடித்தளத்தை கொடுத்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், சாய் சுதர்சன் 13 பவுண்டரிகளுடன் 117 ரன்களும், நாராயண் ஜெகதீசன் 15 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 168 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர். இவர்களில், நாராயண் ஜெகதீசன் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இவர், ஆந்திராவுக்கு எதிராக 114*, சத்தீஸ்கருக்கு எதிராக 107 ரன்கள் என அடித்து அசத்தியுள்ளார்.

IND vs NZ: அதிக ரன்கள் அடித்த டாப் 5 ல் ஒரே இந்திய வீரர்…, நாளை போட்டியில் இந்த நிலை மாறுமா??

இன்றைய கோவாக்கு எதிரான போட்டியில், இவர்களின் அதிரடியால், தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 373 ரன்களை குவித்து அசதியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here