T20 WC 2022: ஒருவர் கூட டாப் 10 ல் இல்லையா?? இந்திய வீரர்களுக்கு என்ன தான் ஆச்சு!!

0
T20 WC 2022: ஒருவர் கூட டாப் 10 ல் இல்லையா?? இந்திய வீரர்களுக்கு என்ன தான் ஆச்சு!!
T20 WC 2022: ஒருவர் கூட டாப் 10 ல் இல்லையா?? இந்திய வீரர்களுக்கு என்ன தான் ஆச்சு!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லாதது ரசிகர்களுக்கு இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலக கோப்பை 2022:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, இந்த தொடரில் தகுதி சுற்றுகளுடன் சேர்த்து, 18 போட்டிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரின் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

 

இதில், இலங்கையின் குசல் மெண்டிஸ் 171 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவர், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிராக அரை சதங்களை அடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்ததாக நெதர்லாந்தின் மேக்ஸ் ஓடவுட் 137 மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா 136 ரன்களுடன் 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளனர்.

இந்த பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட டாப் 10 யில் இல்லை. இனி வரும் போட்டிகளில், விராட் கோஹ்லி, சூர்யகுமார், கே எல் ராகுல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் டாப் மூன்று இடங்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here