புராண காலத்தில் வாடகை தாய் முறை.., ஸ்ரீரங்கம் கோவில் சிற்பம் சொல்வது என்ன? வைரலாகும் நியூஸ்!!

0
புராண காலத்தில் வாடகை தாய் முறை.. ஸ்ரீரங்கம் கோவில் சிற்பம் சொல்வது என்ன? வைரலாகும் நியூஸ்!!
புராண காலத்தில் வாடகை தாய் முறை.. ஸ்ரீரங்கம் கோவில் சிற்பம் சொல்வது என்ன? வைரலாகும் நியூஸ்!!

வாடகைத் தாய் முறையின் கீழ் குழந்தை பெற்றுக் கொள்வது உலக அளவில் தற்போது வளர்ந்து வருகிறது. இந்நிலையில் புராண காலத்திலேயே வாடகைத் தாய் முறை இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

வாடகைத் தாய் முறை:

தற்போதைய நவீன காலகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஏராளமானோர் வாடகைத்தாய் முறையை அதிகம் நாடுகிறார்கள்.அதாவது ஏதோவொரு காரணத்திற்காக கர்ப்பம் ஆகாமல் அல்லது கர்ப்பம் சுமக்க விருப்பம் இல்லாத ஒரு பெண்ணிற்காக மற்றொரு பெண் கர்ப்பம் சுமந்து குழந்தையை பெற்று எடுத்து கொடுப்பதே வாடகைத் தாய் ஆகும். இந்த முறையின் படி ,கருமுட்டை தாயிடம் இருந்தும், விந்தணு தந்தையிடம் இருந்தும் சேகரிக்கப்படும். பின்னர் கரு, வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தப்பட்டு, 10 மாதம் குழந்தையை சுமந்து, கடைசியில் குழந்தையை பெற்றெடுப்பார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் புராண காலத்திலேயே வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்று கொள்வதை கோயில் சிற்பங்கள் கூறுவதாக பிரவீன் மோகன் என்பவர் பேஸ்புக்கில் கூறியுள்ளார். அவர் கூறியது, திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிற்பத்தில், ஒரு பெண் தன்னுடைய வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கும் போது, ஆண் ஒருவர் அந்த பெண்ணின் கருப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார்.

அதாவது அவர் அந்த பெண்ணின் கருப்பையில், என்ன வைக்கிறார் என்பதற்கான பதில் மகாபாரதத்தில் கிருஷ்ணருடைய அண்ணன் பலராமனின் பிறப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது கிருஷ்ணரின் தாயின் கருப்பையில் பலராமர் வளர்ந்து வந்த போது, அந்த கருவை வெளியே எடுத்து அதை வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளார் பிரவீன் மோகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here