7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நமீபியா…, 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 ல் நுழைந்த நெதர்லாந்து & இலங்கை!!

0
7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நமீபியா..., 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 ல் நுழைந்த நெதர்லாந்து & இலங்கை!!
7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நமீபியா…, 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 ல் நுழைந்த நெதர்லாந்து & இலங்கை!!

டி20 உலக கோப்பையில் UAE அணியிடம் நமீபியா தோல்வி அடைந்ததால், சூப்பர் 12 சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை தவற விட்டது.

UAE vs NAM:

டி20 உலக கோப்பை தொடரில் 8 அணிகளுக்கு இடையே தகுதி சுற்றுகள் கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த தகுதி சுற்றின் அடிப்படையில் குரூப் A மற்றும் B யில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதில், குரூப் A யில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இதனால், இந்த பிரிவில் இலங்கை அணி நடந்த 3 போட்டியில் 2 ல் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, குரூப் A யில் இடம்பெற்றுள்ள மற்ற இரு அணிகளான UAE மற்றும் நமீபியாவுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற UAE கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய UAE அணியினர் தொடக்க முதலே அதிரடி காட்டி அசத்தினர். இதனால், UAE அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவிந்திருந்தது. இதில், அதிகபட்சமாக முஹம்மது வசீம் 50, சிபி ரிஸ்வான் 29 பந்தில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் 43* எடுத்திருந்தார்.

அதிரடி பேட்ஸ்மேனை மாற்று வீரராக அறிவித்த ஆஸ்திரேலியா…, பீதியில் இந்திய பவுலர்கள்!!

அடைய கூடிய இலக்கை துரத்திய நமீபியா வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் வைஸ் அரைசதம் (55) கடந்து வெற்றிக்கு போராடினார். ஆனாலும், நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்து தோல்வியடைந்து. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற UAE அணி உலக கோப்பையில் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பியது. இதனால், புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here